சில நிமிடத்தில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே புதிய இந்தியாவின் பலம்: மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்களை சில நிமிடங்களில் அழித்துவிட்டன.
இது புதிய இந்தியாவின் வலிமையைக் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகாரில் இன்று (30) காலை நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றும் போதே இந்தியப் பிரதமர் இதனைக் கூறினார்.
பீகாரில் முன்னதாக ஆற்றிய உரையையும் இதன்போது சுட்டிக்காட்டிய அவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குப் பழிவாங்குவதாக உறுதியளித்ததாகவும், இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும் குறிப்பட்டார்.
இது குறித்து மேலும் பேசிய பிரதமர்,
பஹல்காம் சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நான் பீகாருக்கு வந்தேன்.
பயங்கரவாத மறைவிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று பீகார் மண்ணிலிருந்து நாட்டிற்கு உறுதியளித்தேன்.
அவர்களுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை வழங்கப்படும் என்று நான் கூறியிருந்தேன்.
இப்போது நான் பீகாருக்குத் திரும்பியுள்ளதால், எனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்.
பாகிஸ்தானும் உலகமும் சிந்துாரத்தின் சக்தியைக் கண்டிருக்கின்றன.
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் போதெல்லாம், சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் – என்றும் அவர் குறிப்பிட்டார்.
பகிரவும்...