தானைத் தலைவனுக்கு வாழ்த்து !!!
கடலலைகள் தாலாட்ட
கார்மேகம் குடை பிடிக்க
கங்குல் விலத்தி வந்த
காவியத்து நாயகனே
காலமெல்லாம் வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு !
வல்லை மண் தந்த வற்றாத நதியே
முல்லைப் பூவாய் பூத்த முரசே
கரிகால மலையே
கார்த்திகை மைந்தனே
காலமெல்லாம் வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு !
தமிழ்த்தாயின் மைந்தனே
தானைத் தலைவனே தளபதியே
விடியாத இரவுகளை
விடிவெள்ளியாக்கிய கதிரவனே
காலமெல்லாம் வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு !
துணிவே ஆயுதமாய்
தியாகமே ஆளணியாய்
வீரமே கவசமாய்
வெற்றியே மகுடமாய்
விடுதலையே குறிக்கோளாய்
வாழும் வேந்தனே
வாழ்த்துகின்றோம் வாழ்க பல்லாண்டு !
கவியாக்கம் ரஜனி அன்ரன் (B.A)