தாக்குதல் விவகாரம் – சிறைக்காவலர்கள் போராட்டம்!

பிரான்ஸிலுள்ள சிறைச்சாலைகளின் சிறைக்காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Conde-sur-Sarthe சிறைச்சாலையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு சிறைக்காவலர்கள் காயமடைந்தனர்.

இந்தநிலையிலேயே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(புதன்கிழமை) சிறைக்காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியிலுள்ள சுமார்  20 சிறைச்சாலைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சிறைச்சாலைகளுக்கு முன்பாக டயர்களை எரித்து அதிகாரிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !