தாக்குதல் காட்சிகளை வெளியிட்ட பிரபல சஞ்சிகை – விற்பனைக்குத் தடை

கடந்த வருடத் தேசியதினக் கொண்டாட்டத்தின் போது, நீசின்  Promenade des Anglais இல் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின், கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியின் காட்சிகளை, «Paris Match» சஞ்சிகையின் இன்றைய பதிப்பு வெளியிட்டுள்ளது. இது, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகளைத் துயரம் கொள்ள வைத்துள்ளது. அத்துடன் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கான தொண்டு நிறுவனமும் இதற்கான முறைப்பாட்டை உடனடியாக வழங்கி உள்ளது. பரிசின் நீதிமன்றம் உடனடியாக அனைத்துச் சஞ்சிகைகளையும் விற்பனையில் இருந்து நீக்குமாறு அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கான வழக்கின்  மேலதிகத் தீர்ப்பினை இன்று இரவிற்குள் வெளியிடுவதாகவும் நீதிமன்னறம் தெரிவித்துள்ளது.
 பொதுமக்கள் விவகார அமைச்சகம், இந்த சஞ்சிகையை வெளியிடும் Hachette Filipacchi Médias நிறுவனத்திற்கு, உடனடியாக இந்தச் சஞ்சிகைகளை விற்பனையில் இருந்து நீக்கும்படியும், இலத்திரனியல் வடிவம் உட்பட, எந்த வடிவத்திலும், இந்தச் சஞ்சிகை வெளியிடப்படக் கூடாது எனறும், கண்டிப்பான உத்தவைப் பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைப்பிரிவினரிடம் மட்டுமே இருந்த இந்தக் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியின் காட்சிகள், எப்படி «Paris Match»  இடம் கிடைத்தது என்ற விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !