தாக்குதலுடன் சம்பந்தம் இல்லாதவர்களை அசௌகரியப்படுத்த வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை சம்பந்தமில்லாத நபர்களை அசௌகரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு அனைத்து இன மக்களுக்கும் முக்கியமான காரணியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தனது அமைச்சுப் பதவியை விட நாட்டின் பாதுகாப்பே முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.
அமைதி, சகவாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் அமைச்சுப் பதவியை கைவிட்டதாக ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.