தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் பயங்கவாத அமைப்பு இருப்பதற்கான அறிக்கைகள் இல்லை

சஹ்ரான் எனும் பயங்கரவாதி மற்றும் அவரின் செயற்பாடுகளின் பின்னால் வெளிநாட்டுச் சக்திகள் செயற்படுவதாக தான் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் பயங்கவாத அமைப்பு இருப்பதற்கான அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து எதிர்காலத்தில் இவ்வாறன பயங்வாத செயற்பாடுகள் இடம்பெறாதிருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அவர் கூறினார்.
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் தயாசிறி ஜயசேகர நேற்று சாட்சியம் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பகிரவும்...