‘தளபதி 63’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் குறித்த தகவல்களை உறுதி செய்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதுடன், விரைவில் இப்படத்தில் ஏனைய நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கின்றார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !