தலைமைத்துவம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று
பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் முன்னாள் பொருளாதார வல்லுனருமான மாட் ஹான்கோக் தலைமைத்துவம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் தெரசா மே தனது பதவி விலகும் திகதியை நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை இந்த முடிவை அறிவிப்பார் என உள்நாட்டு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியில், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரிமி ஹண்ட், சர்வதேச மேம்பாட்டுதுறை செயலாளர் ரோரி ஸ்டூவார்ட், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜோன்சன், முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மேக்வே ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பான முக்கிய அறிவித்தல் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.