Main Menu

தரணி ஆண்ட தமிழனின் இன்றைய அடிமை நிலையும் .! காரணமும் .!

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் (இலமூரியா) .
ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம்
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது , ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன் . தமிழர்கள் வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும்,
தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பினவர்கள் என்பதே உண்மை.

இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்,
இங்குதான் நம் வேர்கள் பரவியுள்ளது .இங்குதான் நாம் இன்றும் உள்ளோம்
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,
ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர்,
தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு வலுவான தமிழர் அதிகாரம் உடைய நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுமதுரை நாடு,
இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி,
குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
இப்படியொரு வலுவான இயற்க்கை தோற்றத்தோடு வாழ்ந்து உலகத்திற்கு அறிவியலையும் ,நாகரிகத்தையும் ,போர்மரபையும் அறிமுகப்படுத்திய இனம் இன்று வலுவிழந்து காணப்படுகின்றது இதற்கான காரணம் என்னவென்று சற்று பார்ப்போம்
முதல் காரணம் இயற்க்கை சீற்றம்:-
கி.மு. 6087 கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது இதன் எச்சங்கள் தான் இன்றைய தமிழ்நாடு மற்றும் ஈழம் அதனைசுற்றியுள்ள இந்திய இலங்கை மலேசியா இந்தோனேசிய போன்ற நாடுகளும் தான் இதை அனைத்தும் ஒரு சேர ஆட்சி செயத் தமிழர்கள் உலகம் முழுவதும் நாதியற்று சுற்றுவது தான் வேதனை
இரண்டாவது காரணம் பார்ப்பனீய சூழ்ச்சி:-
ஆரிய படையெடுப்பிற்கு முன்னர்,குமரிக்கண்டம்(தமிழர் நாடு) நாகரிகம் பெற்ற மக்களை கொண்ட நிலமாக இருந்தது , ஆரியம் தன்னுடைய வெற்றி வரலாறாய் பூர்வ குடி தமிழர்களை மண்ணைக் கவ்வ செய்து தன் வரலாற்றின் பக்கங்களை தொடங்கியது

உண்மையில் வரலாற்றில் தோல்வி கண்ட இனம், தன் இனத்தின் பெருமைகள் அனைத்தையும் இழந்து, ஆரியத்திடம் இன்றுவரை சரணடைந்து உள்ளது

பார்ப்பனியம் வெட்ட, வெட்ட வளரக்கூடிய, அழிக்க, அழிக்க மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய தன்மைப் பெறக் காரணம்…. அது, அழியும் தருவாயில் தமிழரின் வலுவை ,திறமையை உள்வாங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டு மறுஉருவாக்கம் செய்து கொள்கிறது. ஆனால் தமிழர்களாகிய நாங்களோ சுய அடையாளம் வேண்டியும் தன்னனுடைய இருப்பை தக்கவைத்து கொள்ளவும் எதிரியோடு கைகோர்த்து தன் இனத்தை வலுவிழந்தாக மாற்றிவிட்டான் .
வரலாற்றில் பிழை செய்த எமது இனம் மீண்டும் வரலாற்றை சரி செய்ய ,மீண்டும் தமிழர் அதிகாரத்தை உருவாக்க ஒவ்வொரு தமிழனும் தன் இனத்தின் விடுதலைக்கு எதிரியின் வடிவத்தை எடுத்து அவனை அழித்தொழிக்க வேண்டும் .
எமது வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படும் எதிரியின் படை எடுப்பின்போதும் இயற்கை பேரிடர் போதும் துரோகிகள் காட்டிக்கொடுப்பினாலும் எமது இனம் சிதையும் தருணம் அதிலிருந்து தற்காத்து மீட்டெடுக்க ஒவ்வொரு காலத்திலும் எமக்கான மீட்பர்கள் தோன்றி எம்மை வழிநடத்தி எமது இனத்தை இன்று வரை தற்காத்து வந்துள்ளனர் அந்த மீட்பர்கள் தமிழீழ தேசியத் தலைவர் பிரபகரனாகவும் ,தமிழ் தேசியத் தலைவர் தோழர் தமிழரசனாகவும் ,பொட்டு அம்மானாகவும் , சங்கராகவும், கிட்டுவாகவும் ,தோழர் லெனின்னாகவும் , மில்லாராகவும், யாழினியாகவும் , அங்கையற்கண்ணியகவும் மாலதியாகவும் ,சோதியாவாகவும் ,விதுசாவாகவும், தோன்றி தமிழ் இனத்தை தற்காத்தனர் அது போல ஒவ்வொரு தமிழர்களும் தனக்குள் இருக்கும் மரபில் இவர்களின் செயல்வடிவம் உள்வாங்கி மீட்பராக மாறுங்கள்

“மரத்தை தற்காக்கும் வேர்களை போன்று மறைந்து பயணியுங்கள்
தமிழ் இனத்தை கட்டியெழுப்பும் வேர்களாக”

சூட்
(12-10-2017)

பகிரவும்...