Main Menu

தமிழ் புலிகளின் கொலையாளிகள் அதிகாரத்தை நோக்கி முன்னேறும் நிலையில் இலங்கை வன்முறையை எதிர்கொள்ள தயாராகின்றது – தி டைம்ஸ்

இலங்கை ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் கொழும்பின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் ஆதரவாளர்கள் கோத்தபாய ராஜபக்சவை உற்சாகத்துடன்  வரவேற்றனர், 

கோத்தாபய ராஜபக்சவின் பெயர் வாக்குசீட்டில் உள்ள அதேவேளை பிரச்சாரத்தில் இன்னொரு ராஜபக்ச ஆதிக்கம் செலுத்துகின்றார்.

கோத்தாபய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த நாட்டை மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஒரு தசாப்த காலமாக ஆட்சி செய்த பின்னர் நான்கு வருடத்திற்கு முன்னர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

தற்போது ராஜபக்சாக்கள்  மீள் எழுச்சி பெறும் நிலையில் உள்ளனர்.

இலங்கையின் தேசிய உடையில், கையில் பெரும் மோதிரங்களுடன் மகிந்த ராஜபக்ச காணப்படும் பதாகைகள் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

மகரகமவில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் -மகிந்த ராஜபக்சவின் தோளின் மேலாக எட்டிப்பார்க்கும் படங்களை காணமுடிந்தது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகவும் இணைந்து  2009 விடுதலைப்புலிகளை ஈவிரக்கமற்ற விதத்தில்  தோற்கடித்து  இலங்கையின் நீண்ட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தனர்.

அவர்கள் அதிகளவான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டனர்.

யுத்த குற்றச்சாட்டுகள்

கோத்தா- என அழைக்கப்படும் கோத்தாபய ராஜபக்ச மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.அவர் கொலைகும்பல்களை இயக்கினார்,சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தளபதிகளையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார்,பாதுகாப்பு வலயங்களில்  40,000ற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அவரே காரணம் போன்ற குற்றச்சாட்டுகள் அவரிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. அவர் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

இந்த வருடம் இடம்பெற்ற கொடுரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு பின்னர் கடுமையானவர்கள் என்ற இந்த சகோதரர்கள் குறித்து  காணப்படும் தோற்றப்பாடு அரசியல் ரீதியில் அவர்களிற்கு  சாதகமான விடயமாக விடயமாக மாறியுள்ளது.

70 வயதான கோத்தா கடந்த வாரம் இடம்பெற்ற அந்த கூட்டத்தி;ல் தேசிய பாதுகாப்பினை அதிகளவிற்கு மையப்படுத்தி உரையாற்றினார்.

தற்போதைய அரசாங்கம் பொலிஸ் விசாரணையாளர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரையும் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என அவர் குற்றம்சாட்டினார்.-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர் கோத்தபாய ராஜபக்ச தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.

நான் அதிகாரத்திலிருந்தால் இந்த துயரம் ஒருபோதும் நிகழ்ந்திராது என அவர் குறிப்பிட்டார்.

அவர் அந்த அறிவிப்பை வெளியிட்ட தருணத்தை அவரின் விமர்சகர்கள் கண்டித்தனர்.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளில் கலந்துகொண்ட பலர்  ராஜபக்ச யுகம் மீண்டும் வரவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த குடும்பத்தின் கதை நான்கு வருடங்களிற்கு முன்னரே முடிவிற்கு வந்திருக்கும். அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.அவமானப்படுத்தப்பட்டனர், இலங்கையை சீனாவின் கடனால் நிரம்பியவர்கள் என்ற விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்கள் பதவியிலிருந்து வெளியேறிய பின்னர் மனித உரிமைமீறல்கள்  ஊழல்  மற்றும் யுத்த குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிகளவில் வெளியாகின.

எனினும் பல சிங்களவர்கள் அவர்களை வீரர்கள் கதாநாயகர்கள் என கருதுகின்றனர்.

விடுதலைப்புலிகளை தோற்கடித்தமைக்காக அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் அவர்களை நேசிக்கும் அதேவேளை  அவர்களது எதிரிகள் அவர்களை பார்த்து அச்சம்கொள்கின்றனர்.

நவம்பர் 16 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமான கருத்துக்கணிப்புகள் இல்லை. ஆனால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் இலகுவாக வெற்றிபெற்றது, இந்த வெற்றி ஜனாதிபதி தேர்தலிற்கான முன்னோடி பரிசோதனை களமாக கருதப்படுகின்றது.

இலங்கையின் அரசமைப்பின் அடிப்படையில் 73 வயது மகிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது,ஆனால் கோத்தா ஜனாதிபதியானால்  அவரை பிரதமராக நியமிப்பார்.

சஜித்

இவர்களின் உயர் பதவிக்கு தடையாகவிளங்குபவர், இலங்கையின் இரத்தம்தோய்ந்த வாரிசு அரசியலின் இன்னொரு வாரிசான 52 சஜித் பிரேமதாச.இவர் தற்போதைய ஆளும் கட்சியின் பிரதி தலைவர் . இவரின் தந்தை 1993 இல் ஜனாதிபதியாகயிருந்தவேளை விடுதலைப்புலிகளின் குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.

இந்த அரசியல் பாரம்பரியம் சஜித் பிரேமதாசவிற்கு  சிங்கள வாக்குகளின் ஒரு பகுதியை உறுதி செய்துள்ளது.மேலும் அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்துள்ள போதிலும் ஒரு அமைச்சராக அவர் குறித்து காணப்படும் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கும் வாக்குகளை பெற்றுக்கொடுக்கும்.

எனினும் வெற்றிபெறுவதற்காக இவர் ராஜபக்சாக்களின்  ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கு  குறிப்பிடத்தக்க அளவு தமிழ் முஸ்லீம் வாக்குகளை பெறவேண்டும்.

ஜனாதிபதியாக பதவி வகித்த ஒரு தசாப்த கால பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தை குடும்ப வர்த்தகமாக மாற்றினார்.

முக்கிய பதவிகளிற்கு தனது உறவினர்கள் பலரை நியமித்தார்.

பசில் ராஜபக்ச

ஊழல் குற்றச்சாட்டுகளிற்காக 2015 இல்  கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ச கோத்தபாய  ராஜபக்சவின் பிரச்சாரங்களிற்கான மூலோபாயங்களை உருவாக்குகின்றார்.

ஒரு பேட்டியில் அவர் அரசியலில் தனது குடும்பத்தினரின்  அளவுக்கதிமான ஈடுபாடு குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

இலங்கையில் அனைத்தும் குடும்பங்களை அடிப்படையாக வைத்து கட்டியெழுப்ப படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

தனது குடும்பம் கடந்த காலங்களில் தவறிழைத்தது என்பதை ஏற்றுக்கொண்ட அவர் மனித உரிமை விடயங்களில் வேறு விதமான அணுகுமுறைகளை பயன்படுத்தியிருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் மகிந்தவின் ஒரு உருவப்படத்திற்கு கீழே அமர்ந்தபடி அவர்  இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை கோத்தா முடிவிற்கு கொண்டுவந்த வேளை 40,000ற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை கையை அசைத்து அவர் நிராகரித்தார்.

பல குற்றச்சாட்டுகளும் எதிர் குற்றச்சாட்டுகளும் உள்ளன, விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர், தற்போதைய அரசாங்கத்திற்கு இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நான்கு வருடங்கள்  இருந்தபோதிலும் அவர்களால் எதனையும் நிருபிக்க முடியவில்லை என பசில் தெரிவித்தார்.

வெள்ளை வான்களும் கொலைகார கும்பல்களும் மீண்டும் வரலாம் என்ற அச்சம் குறித்து கருத்து தெரிவித்த பசில்  கடந்த முறை விடயங்கள் எப்படி இடம்பெற்றன என்பது குறித்து தெளிவுபடுத்தல்களை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு இடம்பெறாது என்பதை என்னால் உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

வெள்ளை வான்களின் மீள் வருகை

ஆனால் ராஜபக்சாக்களின் மீள் வருகை என்பது பல இலங்கையர்களிற்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.அவர்கள் வெள்ளை வான்கள் மீண்டும் வருவது குறித்து பேசுகின்றனர்.

இலக்கதகடு இல்லாத வெள்ளை வான்களில் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் கடத்தப்பட்டதையும்  அவர்கள் திரும்பிவராதையுமே அவர்கள் அவ்வாறு தெரிவிக்கின்றனர்.

மனித உரிமை செயற்பாட்டாளரான தனது கணவர்ஸ்டீபன் 2009 மேயில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூறுகின்றார் வதனா சுந்தரராஜ் நினைவுகூறுகின்றார். இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்துகொண்டிருந்த தருணங்களில் இது இடம்பெற்றது.

அவர் தனது கணவருடனும் மூன்று பிள்ளைகளுடனும் காரில் இருந்தவேளை மோட்டார்சைக்கிள் ஒன்று அவர்களின் காரை கொழும்பின் மும்முரமான வீதியில் 

வழிமறித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருக்க ஆயுதமுனையில் ஸ்டீபனை சீருடை அணியாத நபர்கள் வானில் ஏற்றியுள்ளனர்.

அதன் பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆரம்பித்தில் சிரேஸ்ட அதிகாரிகள் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஓர தவறு என தெரிவித்துள்ளனர்.

மற்றொரு அதிகாரி அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார் ஆனால் பின்னூ மௌனமே நிலவுகின்றுத.

நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் முடிவிற்கு கொண்டுவரப்படும் என வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் 2015 இல் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தமை வதனாவிற்கு புதிய நம்பிக்கையை அளித்தது.

அவர்களை நான் நம்பினேன் ஆனால் அவர்கள் எதனையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையை பொறுத்தவரை இவை நம்பிக்கையற்ற காலங்கள் என தெரிவிக்கின்றார் நிலைமாற்றுக்கால நீதி விடயங்களை கையாளும் சட்டத்தரணி மாதுரி தமிழ்மாறன் தெரிவிக்கின்றார், நிலைமை இன்னமும் மோசமடையும் என அச்சம் கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த கருத்தினை வதனா சுந்தரராஜ் ஏற்றுக்கொள்கின்றார் நான் மிகவும் அச்சமடைந்துள்ளேன் நான் எனது விவகாரம் குறித்து பேசுவதற்கு ஐநாவிற்கு ஜெனீவாவிற்கு சென்றுள்ளேன் என அவர் தெரிவிக்கின்றார்.

ராஜபக்சாக்கள் வெற்றிபெற்றால் எனது குடும்பம் பாதுகாப்பாகயிருக்கும் என நான் கருதமாட்டேன்,கடந்த காலங்களின் அனைத்து அச்சுறுத்தல்களும் மீண்டும் ஆரம்பமாகும் வெள்ளை வான்கள் மீண்டும் வரும் என நான் கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அச்சமடைந்துள்ளதால் தேர்தலிற்கு முன்னதாக எனது இரு மகன்மாரையும் வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளேன் என அவர் தெரிவிக்கின்றார்.

பிலிப்ஸ்சேர்வெல்

தி டைம்ஸ்- யுகே

தமிழில் ரஜீபன்

நன்றி வீரகேசரி