தமிழ் படத்தில் நடிக்க தயாராகும் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப்படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. ஜான்வி நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. பல இயக்குனர்கள் ஜான்வியை அணுகி கதை சொல்லி வருகிறார்கள்.
அடுத்ததாக கரன் ஜோகர் இயக்கும் புதிய இந்திப் படத்தில் நடிக்க ஜான்வி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில், அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஜான்வியிடம் பேசி வருகிறார்கள்.
தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஜான்விக்கு வாய்ப்பு வந்துள்ளது. இரண்டு இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது ‘‘தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும்’’ என்றனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !