தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை – மஹிந்த தரப்பு!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை போல தனக்கு தோன்றுகின்றது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாகவும், பொலிஸ் அதிகாரிகளாகவும் தமிழர்கள் இலங்கையில் கடமையாற்றி வருகின்றனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களை பாதுகாப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வதில்லை.
சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தமது பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன், சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அருகில் வைத்துக் கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும், புலம்பெயர் தமிழர்களுக்காகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலை செய்து வருகின்றனர்.