Main Menu

தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதாக பா.சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சில விடயங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மத நல்லிணக்க அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க, அது தொடர்பில் உரிய வகையில் ஆராய்ந்து தீர்வினை வழங்குவதாகத் தெரிவித்தார்.
பகிரவும்...
0Shares