தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் ஐ.நா பிரதிநிதி சந்திப்பு
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம், குறித்தும், இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவையும், ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.