தமிழின அழிப்பை கண்டித்து கறுப்பு கொடி போராட்டத்திற்கு தயாராகும் கடற்றொழிலாளர்கள்!

தமிழின அழிப்பை கண்டித்து யாழ். பல்கலை மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தின்போது கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வன் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் காலநீடிப்பு வழங்கப்படக் கூடாது என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமூகம் பூரண ஆதரவை வழங்கும்.

அன்றைய தினம் எங்களுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களுடைய தொழில் நடவடிக்கைகளை நிறுத்தி இந்த போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவார்கள். அனைத்து இடங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்படும்.

உண்மையில் இந்த தமிழின அழிப்பை மேற்கொண்ட இலங்கை அரசாங்கம் இது தொடர்பான விசாரணைகள் வேண்டாம் என்று வெளிப்படையாகக் கூறி வருகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்களின் தலைவர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரசாங்கத்தோடு இணைந்து தமிழின அழிப்புக்கு எதிரான விடயத்தில் அரசாங்கத்தோடு சேர்ந்து இருப்பது உண்மையில் வேடிக்கையானது” எனத் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !