தமிழின அழிப்புக்கு நீதி கோரி 6 வது நாளாக யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 6 வது நாளாக இன்றைய தினம் காலை 10 மணிக்கு Dortmund நகரிலும் மாலை 5 மணிக்கு Münster நகரிலும் ஊடறுத்து சென்று அங்குள்ள பல்லின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் முகமாக கண்காட்சி பதாதைகளை அமைத்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் குறிகிய கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

Dortmund நகர முதல்வர் அலுவலகத்துக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றது/ நடந்துகொண்டிருக்கின்றது இனவழிப்பு என அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனுக்கையளிக்கப்பட்டது. நாளைய தினம் காலை Bielefeld நகரிலும் மாலை Hannover நகருக்கும் பயணித்து சென்று புதன்கிழமை  யேர்மன் தலைநகருக்கு விழிப்புணர்வு ஊர்திப் பயணம்  சென்றடையவுள்ளது.

 

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !