தமிழின் பெருமையை மீட்டெடுத்தது திராவிட இயக்கம்: மு.க.ஸ்டாலின்

தமிழரின் பெருமையை மீட்டெடுத்தப் பெருமை திராவிட இயக்கத்துக்கே உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அதில் தொடர்ந்து கூறுகையில்,

“சமய இலக்கியங்கியங்களும் வட மொழி காவியங்களும் பேசப்பட்டு வந்த காலத்தில் தமிழின் பெருமையை மீட்டெடுத்தது திராவிட இயக்கமாகும்.

தமிழ், தமிழன், தமிழ்நாடு என பேசுவது குறுகிய வாதமென சிலர் விமர்சனம் செய்துகொண்டு இருக்கின்றனர்.

அந்தவகையில் எனது தாயின் பெருமையை, எனது தந்தை மீதான அதிகமான பாசத்தை குறுகிய வாதமாக நாம் எவ்வாறு ஏற்றுகொள்ள முடியும்” என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !