தமிழிசை உறுப்பினராக பதிவு செய்துள்ளார் – ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக தான் இணைந்துள்ளதாக இ-மெயில் வந்துள்ளது என பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனை அக்கட்சி மறுத்தது. இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் எண் அனுப்பப்படுவதாக விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இணையதளத்தில் தமிழிசை என்ற பெயரில் பதிவு செய்ததற்கான ஆதாரத்தை அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவரது செல்போன் எண் மற்றும் மெயில் பாதுகாப்பு காரணமாக மறைக்கப்பட்டுள்ளது.
மேலும், “உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே …நீங்கள் காட்டியது போல நாங்களும் “படம்” காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ?
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது. அதுவரை … பதிவு செய்தமைக்கு நன்றி” என கிண்டலாக பதிவிடப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !