தமிழர் தரப்பிலும் சுயநல சக்திகள் செயற்படுகின்றன – சிறிகாந்தா

அர­சி­யல் தீர்வை வென்­றெ­டுப்­ப­தைத் தடுப்­ப­தில் சிங்­களத் தரப்­பில் இருந்து மட்­டு­மல்­லா­மல் தமி­ழர் தரப்­பில் இருந்­தும் திரை­ம­றை­வில் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப் பட்டு வரு­வ­தாக ரெலோ அமைப்­பின் பொதுச்­செ­ய­ல­ரும், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், சட்­டத்­த­ர­ணி­யு­மான சிறி­காந்தா தெரி­வித்­தார்.

மட்­டக்­க­ளப்­பில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மை­யென்­பது சம்­பந்­தன் மட்­டு­மல்ல. அதில் மூன்று அங்­கத்­து­வக் கட்­சி­கள் இருக்­கின்­றன. சம்­பந்­தன் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ராக இருந்­தா­லும்­கூட கூட்­டுப்­பொ­றுப்பு இருக்­கின்­றது. கூட்­ட­மைப்­பின் தலைமை தமிழ் மக்­க­ளுக்குத் துரோ­க­மி­ழைக்­கா­மல் கொடுத்த வாக்­கு­று­தியை மீறா­மல் நேர்­மை­யு­டன் நம்­பிக்­கை­யு­டன் செயற் பட்­டு­ வ­ரு­கின்­றது.

85 வய­தி­லும் சம்­பந்­தன் தனது உடல்­நி­லை­யை­யும் கருத்­திற் ­கொள்­ளாது அர­சி­ய­லில் உள்­ளார் என்­பதை அவரை விமர்­சிப்­ப­வர்­கள் உணர்ந்­து­கொள்ள வேண்­டும். அர­சி­யல் தீர்­வுத்­திட்­டம் தொடர்­பில் தனி­யாகக் கூட்­ட­மைப் பின் தலை­மையோ சம்­பந்­தனோ மாத்­தி­ரம் கையாண்டு தீர்­வு­கா­ணும் பிரச்­சி­னை­யில்லை.

இந்த நாடு சுதந்­தி­ர­ம­டைந்த காலம் தொடக்­கம் இந்­தப் பிரச்­சினை இருந்து வரு­கின்­றது. புரை­யோ­டிப்­போ­யுள்­ளது. இந்தப் பிரச்­சி­னை­யின் விளை­வாகப் போரை முழு நாடும் சந்­தித்­துள்­ளது. இந்­தப் பின்­ன­ணி­யில் ஒரு அர­சி­யல் தீர்­வைக் காண்­பது என்­ப­தும், தென்­னி­லங்­கை­யில் சிங்­கள பௌத்த இன­வா­தம் என்­ப­தும் இன்­னும் தனது தீவி­ரத்­தை மட்­டுப்­ப­டுத்­தக்­கூட இல்­லாத நிலை­யில் தீவி­ரம் காணும் நிலை­யில் அர­சி­யல் தீர்வு என்­பது இல­கு­வா­னது அல்ல.

தமிழ் கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை காணப்­ப­ட­வேண்­டும். தமிழ் மக்­க­ளின் பெய­ரால் அர­சி­யல் நடத்­தும் கட்­சி­கள் ஒற்­று­மைப்­ப­ட­வேண்­டும். அந்த ஒற்­றுமை இங்கு இல்லை. அனை­வ­ரும் கூட்­ட­மைப்­பைக் குறை கூறிக்­கொண்­டி­ருக் ­கின்­ற­னர். ஆனால் அவர்­கள் இந்தப் பிரச் சினைக்குத் தீர்­வாக தங்­க­ளால் என்ன செய்­ய­மு­டி­யும் என்ன செய்து காட்­ட­மு­டி­யும் என்­பதை இது­வ­ரை­யில் தெரி­விக்­க­வும் இல்லை, தெரி­விக்க முயற்­சித்­த­தும் இல்லை.

கூட்­ட­மைப்பு தனது பாதை­யில் உறு­தி­யு­டன் பய­ணிக்­கும். எமது தமி­ழீழ விடு­தலை இயக்­கம் கூட்­ட­மைப்­பின் அங்­கத்­துவக் கட்சி என்ற அடிப்­ப­டை­யில் தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் வேண­வாக்­களை உள்­ள­டக்­கும் வகை­யி­லான அர­சி­யல் தீர்­வை வென்­றெ­டுப்­ப­தற்கு ஏது­வாகத் தங்­க­ளது பங்­க­ளிப்­பை வழங்­கும்.

அர­சி­யல் தீர்­வுத்­திட்­டம் இழுத்­த­டிக்­கப்­ப­டக் கூடாது. இந்த ஆண்­டுக்­குள் அது வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று நாங்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றோம். இந்த முயற்­சி­கள் தோல்­வி­கா­ணு­மாக இருந்­தால், இந்த ஆண்­டுக்­குள் ஒரு தீர்­வை இந்த சிங்­களத் தேசி­யம் வழங்க நட­ வ­டிக்­கை­யெ­டுக்­கா­விட்­டால் அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்­பில் கூட்­ட­மைப்பு கூட்­டாகத் தீர்­மா­னிக்­கும்.

கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக தமி­ழர் ஒரு­வர் வர­வேண்­டும் என்­ப­தில் கூட்­ட­மைப்பு உறு­தி­யா­க­வுள்­ளது. ஆனால் தமிழ் த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனி­யாக ஆட்­சி­ய­மைக்­க­மு­டி­யாத நிலையே கிழக்­கில் உள்­ளது.

கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் நீண்­ட­கால அனு­ப­வம் உள்­ள­வர்­கள். சிலர் போராட்ட அர­சி­யல் களத்­தில் இருந்து ஜன­நா­யக அர­சி­யல் களத்­ துக்கு வந்து நீண்­ட­கால அர­சி­யல் அனு­ப­வம் கொண்­ட­வர்­க­ளாக உள்­ள­னர். எங்­க­ளுக்கு எதி­ரா­க­வுள்ள சவால்­களை நாங்­கள் அறி­வோம்.

மக்­கள் எங்­கள் மீது சுமத்­தி­யுள்ள பொறுப்­பு­களை நாங்­கள் நிறை­வேற்­று­வோம். ஒரு அர­சி­யல் தீர்வை வென்­றெ­டுப்­ப­தில் சிங்­கள தரப்­பில் இருந்து மட்­டு­மல்ல தமி­ழர் தரப்­பில் இருந்­தும் திரை­ம­றை­வில் இருந்து ஏவப்­ப­டு­கின்ற எதிர்ப்­புக்­க­ளை­யும் நாங்­கள் நன்­றாக உணர்ந்து கொண்­டுள்­ளோம்.

ஒரு தீர்வு வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தில் தமி­ழர் தரப்­பி­லும் சில சுய­நல சக்­தி­கள் செயற்­ப­டு­கின்­றன. இந்­தப் பின்­ன­ணி­யில் எங்­கள் பொறுப்பை நாங்­கள் நிறை­வேற்­று­வோம் – என்­றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !