தமிழர்களை உலகத்தில் யாரும் மிஞ்ச முடியாது – பிரான்ஸ் நாட்டவர் தெரிவிப்பு

வரவேற்பு அளிப்பதில், தமிழர்களை, உலகத்தில் யாரும் மிஞ்ச முடியாது என பிரான்சை சேர்ந்த மேரி கார்மென்ட் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியர் காரைக்குடி, ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட போதே இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

காரைக்குடி, ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் நடந்த பொங்கல் விழாவுக்கு, சிறப்பு விருந்தினர்களாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணியர் பங்கேற்றனர்.

மாணவர்கள் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆடி அவர்களை வரவேற்றனர். மாணவர்களுடன் சேர்ந்து பிரான்சை சேர்ந்தவர்களும் ஆடினர். ஆசிரியைகள் முளைப்பாரியை சுற்றி கும்மியடித்தனர். அதில் பங்கேற்ற, பிரான்ஸ் சுற்றுலாப்பயணியரும் கும்மியடித்து முளைப்பாரியை சுற்றி வந்தனர்.

பிரான்சை சேர்ந்த மேரி கார்மென்ட் கூறியதாவது:

கடந்த, 7-ம் தேதி, நாங்கள் 16 பேர், இந்தியாவுக்கு சுற்றுலா வந்தோம். இங்குள்ள கலை, கலாசாரங்களை அறிந்து கொள்ளும் வகையில், சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறோம். தற்போது, கானாடுகாத்தானில் தங்கியுள்ளோம்.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில், எங்களை பங்கேற்க வைத்த, இப்பள்ளிக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி. அவர்களின் வரவேற்பு, எங்கள் விழிகளில் ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது. வரவேற்பு அளிப்பதில், தமிழர்களை, உலகத்தில் யாரும் மிஞ்ச முடியாது என அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !