தமிழக மக்கள் மனங்களில் எந்த கட்சிக்கும் இடமில்லை: ஜெயக்குமார்

தாமரை, சூரியன், மய்யம் எதற்கும் தமிழக மக்கள் மனங்களில் இடமில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கே.வி.கே குப்பத்தில் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ஜெயக்குமார் அதன்பின்னர் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, அ.தி.மு.க. விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளமை தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர், “அ.தி.மு.க. வை விமர்சனம் செய்பவர்கள் இந்த உலகத்தை உணர்ந்தவர்களாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.

மக்களுடன் மக்களாக இருந்தால் அவர்கள் எப்போதும் அ.தி.மு.க-வை ஏற்றுக் கொள்வார்கள். 27 வருடங்களுக்குமேலாக அ.தி.மு.க. தமிழகத்தை ஆட்சி செய்கிறது. வருங்காலத்திலும் அ.தி.மு.க-வே ஆட்சிசெய்யும். தாமரை, சூரியன், மய்யம் எதற்கும் தமிழக மக்கள் மனங்களில் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !