தமிழக மக்களிடம் முக்கிய கோரிக்கை விடுத்தார் பீலா ராஜேஷ்!
காய்ச்சல், இருமல் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டுவிட்டர் மூலம் தமிழக மக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவதாக கோவையில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.