தமிழக ஆளுநர் பன்வாரிலாலை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
தமிழக ஆளுநர் பன்வாரிலாலை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசனினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்யும் தீர்மானம் ஒன்றினை தமிழக அமைச்சரவை நிறைவேற்றியிருந்தது.
அத்துடன், குறித்த தீர்மானத்தினை தமிழக ஆளுநர் பன்வாரிலாலிற்கும் தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்திருந்தது.
இந்தநிலையில் தீர்மானம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விரைவில் விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.