தமிழக அரசுக்கு உதவியதாலேயே அ.தி.மு.க ஆதரவு: தமிழிசை

தமிழ் நாட்டுக்கு மத்திய அரசாங்கம் உதவி வருகின்றமையாலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்ததென பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீது 451 உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில், இதற்கு எதிராக 325 வாக்குகளும், ஆதரவாக 126 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் 199 மேலதிக வாக்குகளினால், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையிலேயே பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !