தமிழகத்தில் COVID-19 கிருமித்தொற்றுக்கு முதல் நபர் பலி!
COVID-19 கிருமித்தொற்று காரணமாக தமிழகத்தில் முதல் மரணம் நேர்ந்திருக்கிறது.
மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆடவர் உயிரிழந்ததைத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தினார்.
மாண்டவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல்நலக் கோளாறுகள் இருந்ததாக திரு. விஜயபாஸ்கர் கூறினார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றிலிந்து 21 நாள்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 560க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 53 பேர் குணமடைந்து விட்டனர். 12 பேர் மரணமடைந்தனர்.