தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் 15 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வைத்தியாசலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக விமான நிலையத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 74,880 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனையிலேயே 15 பேர் மேற்படி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 88 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் மீதமுள்ள 87 பேரில் 85 பேருக்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில், இருவரின் இரத்த மாதிரிகள் பரிசோதனையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரவும்...