தமிழகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றனர்.
இதற்கமைய பாடசாலைகள், கல்ல}ரிகளை திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்திருந்தார்.
இதன்படி இன்று மாணவர், மாணவியர் கொரோனா தொற்று வழிக்காட்டல் நெறிமுறைக்கு அமைய பாடசாலைக்கு சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.