தமிழகத்தில் குறைந்து வரும் வைரஸ் பரவல்: 27 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்று இல்லை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத் தன்மை குறைந்துவருவதாக தமிழ்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், நேற்று ஒரேநாளில் மாநிலம் முழுவதும் ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 76 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைய பாதிப்புடன் சேர்த்து மொத்தமாக ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, ஒரே நாளில் 55 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக உயர்ந்ததோடு, மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கொலைகார நோயானா கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக மாவட்ட வாரியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி,சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்து, பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
தென்காசியில் புதியதாக 5 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 31 ஆகவும், விழுப்புரத்தில் புதியதாக 4 பேருக்கு உறுதியாகி பாதிப்பு 40 ஆகவும் அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆகவும், தஞ்சாவூரில் 49 ஆகவும் அதிகரித்துள்ளது.கள்ளக்குறிச்சியில் புதியதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில், கோயம்புத்தூரில் கொரோனா தொற்று 134 ஆக அதிகரித்துள்ளது.
புதியதாக தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் 51, திருவாரூர் 28, காஞ்சிபுரத்தில் 10 என நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.ஆக மாநிலம் முழுவதும் மொத்தமாக ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள 10 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் மீதமுள்ள 27 மாவட்டங்களில், புதிதாக கொரோனா பாதிப்பு நிகழவில்லை.கொலைகார நோயான கொரோனாவ பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
பகிரவும்...