தமிழகத்தில் ஆளுநர் தலைமையில் குடியரசு தின நிகழ்வுகள்

இந்தியாவின் 70ஆவது குடியரசு தினம் அனைத்து மாநிலங்களிலும் மிகவும் சிறப்பாக இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றது.

அதன்பொருட்டு தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையிலும் குடியரசு தின நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு சென்னையில் நடைபெறுகின்ற குடியரசு தினத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்திய தேசிய கொடியை ஏற்றி ஆரம்பித்து வைத்தார். தற்போது முப்படையினரின் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழா விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் குறித்த நிகழ்வுகளில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !