தமிழகத்தின் மீது அக்கறை செலுத்துபவர்களுக்கே ஆதரவு: பழனிசாமி

தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்குமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மாற்று கட்சிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் அ.தி.மு.கவில் இணைந்துக்கொண்ட நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

இதன்போது, அந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தமிழ் நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்தும் ஒருவரே மத்தியில் ஆட்சியமைக்க வேண்டுமென்பதே எங்களின் நிலைப்பாடாகும்.

இதேவேளை உள்ளூராட்சி அமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்த காலத்தில், செய்யாத விடயங்களை தற்போது தேர்தலுக்காக அவர் செய்து வருகின்றார்.

மேலும் கிராமம் பற்றி அறியாத ஸ்டாலின், தற்போது கிராமம் கிராமமாக சென்று மக்களை தவறாக வழி நடத்தி வருகின்றார்” எனவும் பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !