தமது நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் லிபியா
லிபியாவின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமான நிலையை அடைந்துள்ளதனால், லிபியாவில் உள்ள தமது நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் உள்ள அமெரிக்க படைபிரிவினரை, வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளதாக அமெரிக்க-ஆபிரிக்க கட்டளை பணியகம் தெரிவித்துள்ளது.
லிபியாவில் அமைதிகாக்கும் படையணியில் கடமையாற்றிய இந்தியர்களை, இந்திய அரசாங்கம் டியூனிசியாவிற்கு மாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜென்ரல் கலீபா ஹப்ரின் தலைமையிலான ஆயுததாரிகள் லிபிய தலைநகர் ரிப்பொலியை கைப்பற்றும் நோக்கில் கிழக்கு பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி நகர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்படும் லிபிய பிரதமர்இ ஆயுததாரிகளை பயன்படுத்தி நாட்டில் சதி திட்டம் ஒன்றை தீட்டுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு கேணல் கடாபி பதவியில் இருந்து அகற்றப்பட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னர், அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்த லிபியாவில் வன்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.