தந்தையர் தின பதிவு

இலங்கையில் நான் கடமையாற்றும் போது நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான பல பயிற்சி நெறிகளை மேற் கொண்டுள்ளேன்.

அந்த சந்தர்ப்பங்களில் உலகில் உங்களுக்கு விருப்பமான ஹீரோ யார் ? உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஹீரோயின் யார் என்று மாணவ மாணவிகளிடம் கேட்பதுண்டு

அப்போது இந்த மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்களுடைய பெயர்களையும்
நடிகர் நடிகைகளுடைய பெயர்கள் சங்கக்கார ,சச்சின், ஷாருக்கான், விஜய், அஜித் , என்றும் ஹீரோயின் தமன்னா ஹன்சிகா என்றும் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போவார்கள்.

எந்த ஒரு பிள்ளையும் தனது தந்தை தான் தனது ஹீரோ தாய் தான் தனது ஹீரோயின் தனது தாய் தந்தையர் தான் தனது Role model என்று கூறுவதை காண முடியவில்லை.

சிறு பராயத்தில் தனது தந்தை தான் இந்த உலகின் மிகப்பெரிய ஹீரோ, என்று நினைத்த அந்த குழந்தை உலகில் எல்லா விடயங்களையும் தனது தந்தைக்கு தெரியும் என்று நினைத்த அந்த பிள்ளை வளர்ந்து வரும் போது தனது தந்தைக்கு ஒன்றுமே விளங்காது , இவருக்கு ஒன்றுமே தெரியாது ,தனது பிள்ளையின் 5வயது வரை ஹீரோவாக தந்தை பின்னர் எவ்வாறு காலப்போக்கில் zeroவாக மாறினார் ? தாய் தந்தையர் தான் உலகம் என்று இருந்த பிள்ளைகளின் கண்களுக்கு அவர்களது வளர்ச்சியின் போது எப்படி இந்த தந்தை வேண்டத்தகாதவராக காட்சியளித்தார்.?

குழந்தைகள் நாளுக்கு நாள் புதிய விடயங்களை தேடி மாற்றங்களுக்கு உட்பட்டார்கள் தந்தையர்களாகிய நாம் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப , புதிய உலகுக்கு எம்மை தயார் படுத்திக்கொள்ள வில்லை அதனால் எமது குழந்தைகள் மத்தியில் தந்தைமார் (Expire )காலாவதியாகி விடுகிறோம்,

அதனால் குழந்தைகளகள் கண்களுக்கு நாம் zeroவாகவும் எங்கோ இருக்கும் விளையாட்டு வீரர்கள் ஹீரோக்களாகவும் காட்சி அளிக்கிறார்கள். அந்த விளையாட்டு வீரர்கள் ,நடிகர் நடிகைகள் ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைகளோடு சமூக ஊடகங்கள் Twiter , Instergram , Facebook ஊடாக பேசுகிறார்கள் உங்கள் பிள்ளைகள் அவர்களை சமூக ஊடகங்கள்ஊடாக follow பண்ணுகிறார்கள்.

பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசிய நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? உங்கள் பிள்ளைகளோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா ?

பெற்றோர்களே நாம் தான் மாறவேண்டும், நம் குழந்தைகள் அல்ல.

பிள்ளைகளோடு நேரம் ஒதுக்குங்கள், உங்களது குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள் அவர்களது விருப்பு வெறுப்புக்களையும் அறிந்து கொள்ளுங்கள், சரி எது பிழை எது என்பதை உணர்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுங்கள், நீங்களும் கொஞ்சம் மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு பிள்ளையும் வளர்ந்ததன் பின்பே தனது தந்தையின் தியாகத்தையும் தந்தையின் அன்பையும் , தம்மை வளர்க்க தனது தந்தை பட்ட கஸ்டத்தையும் உணர்கிறார்கள் . அப்போது அவர்களும் தந்தையர்களாக இருப்பார்கள். அல்லது அவர்களது தந்தை அவர்களை விட்டு பிரிந்திருப்பார்.

– ஹைதர் அலி


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !