தண்ணீர், உணவு இல்லாமல் 77 வருடங்களாக வாழும் சாமியார்

உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் ஒரு முதியவர் 77 வருடங்களாக வாழ்ந்து வருவது
ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு வேளை உணவு அல்லது இரு வேளை சாப்பிடவில்லை என்றாலே பலருக்கு கிறுகிறுவென வந்து விடுகிறது. ஆனால், இந்தியாவில் வசிக்கும் ப்ரஹ்லாத் ஜானி என்ற சாமியார் உணவு இல்லாமல் 77 வருடங்கள் வாழ்ந்து வருகிறார். அவரை அனைவரும் மாதாஜி என அழைக்கின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் நடந்தே செல்வது, தொடர்ந்து பல மணி நேரங்கள் தியானங்கள் செய்வது, தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு ஆசி வழங்குவது என ஜானி பிசியாகவே இருக்கிறார்.

உணவு மற்றும் தண்ணீரை அவர் எடுத்துக்கொள்வதில்லை என்பதால் அவர் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க கூட எப்போதும் செல்வதில்லை.உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவர் 77 வருடங்களாக வாழ்ந்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவரை பரிசோதனை செய்ய விரும்பிய மருத்துவர்கள், இவரை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு மருத்துவமனையில் வைத்து சோதனைக்கு உட்படுத்தினர்.

அவர் உள்ள அறையில் பல கேமராக்களை வைத்து கண்கானித்தனர். 15 நாட்கள் அங்கிருந்தும் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் அவர் இயல்பாகவே இருந்தார். பல சோதனைகளுக்கும் அவர் உட்படுத்தப்பட்டார். முடிவில் அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார் என்பதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்.

தற்போது 82 வயதாகியுள்ள அவர், சுறுசுறுப்பாகவே இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று வருகிறார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !