தட்டம்மை நோயால் வாலிபர் ஒருவர் மரணம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டு அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுவிஸில் மிக மிக அரிதாகவே தட்டம்மை நோயால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ஆனால், சமீப காலமாக இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டு தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 22 ஆக இருந்த எண்ணிக்கை, 2015-ம் ஆண்டு 36 ஆக அதிகரித்தது.

ஆனால், இதே எண்ணிக்கை 2017-ம் ஆண்டு 70 ஆக அதிகரித்து அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுமட்டுமில்லாமல், இந்த நோய் தாக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் நுரையீரல் பாதிப்படைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அண்மையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டிற்கு பிறகு தட்டம்மை நோயால் சுவிஸில் உயிரிழந்த முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2009-ம் ஆண்டு ஜேனிவா மாகாணத்தில் தட்டம்மை நோயால் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் ஒருவர் இந்நோயால் பலியாகியுள்ளதால் தட்டம்மையை முழுமையாக ஒழிக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !