தடைகளை மீறி யாழ்.பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி
இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.
இருப்பினும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் உரிமைக்கு தற்போதைய அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக நேற்றைய தினம் பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் குறித்த தடைகளை மீறி மாணவர்கள் பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.