Main Menu

தடைகளுக்கு மத்தியில் வட கொரியாவில் நவீன நகரம்: வியப்பில் சர்வதேசம்!

‘நவீன நாகரிகத்தின் சுருக்கம்’ என்று அழைக்கப்படும் புதிய நகரத்தை வட கொரியா அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.

வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்ஜியோனில் சிவப்பு நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நகரம், நாட்டின் மிக முக்கியமான கட்டுமானத் திட்டங்களில் ஒன்றாகும்.

அத்தோடு, தனித்துவமான, அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்த நகரம், வட கொரியாவின் வேறு எந்த நகரத்தையும் ஒத்திராத நகரம் என கூறப்படுகின்றது.

4,000 குடும்பங்களுக்கு இடமளிக்கக்கூடிய இந்த நகரம் – புதிய குடியிருப்புகள், ஒரு ஸ்கை சாய்வு மற்றும் ஒரு அரங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உட்பட 450 இற்க்கும் மேற்பட்ட புதிய கட்டடங்கள் இந் நகரத்தில் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை ஏராளமான பொருளாதார தடைகளுக்கு உள்ளாகியுள்ள வட கொரியாவில், பலர் உணவு, எரிபொருள், மின்சாரம், நீர் மற்றும் பிற தேவைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு நரகம் உருவாக்கப்பட்டுள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.