தஜிகிஸ்தான் சிறையில் துப்பாக்கிச் சூடு! – 13 பேர் உயிரிழப்பு

தஜிகிஸ்தான் சிறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

தஜிகிஸ்தானின் குஜாந் நகரிலுள்ள சிறைச்சாலையொன்றில் நேற்று கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மோதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக, பாதுகாப்பு படையினர் பாரிய துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

படையினரின் குறித்த கட்டுப்பாட்டு முயற்சியில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த மோதல் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் அரசாங்க தரப்பில் அறிவிக்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !