தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி
திருக்கார்த்திகை திருவிழாவான நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), நல்லூர் முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்காட்சியளித்தார்.
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் 17ஆம் திருவிழாவான நேற்றைய தினம் திருக்கார்த்திகை திருவிழாவாகும்.
அதனை முன்னிட்டு, அழகிய அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.
கொரோனோ தொற்று காரணமாக ஆலயத்தினுள் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில், திருவிழாக்கள் அனைத்தும் உள்வீதியிலையே நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.