Main Menu

தங்கை வரம்

தாரம் வரமுன்னே
தகப்பனாகலாம்..

அண்ணா என்றாமல்
அடேய் எண்டவும்
அரியண்டம் எங்கேயென்று
அம்மாவை கேட்டவள்
அண்ணன் வந்தால்
அடங்கி போய்
அப்பிடியே மாறி
அப்பாவியாய் நடிக்கவும்
ஆசையாய் ஒருத்தி..

அடிபுடி
தடியடி
வீட்டுல கெடுபிடி
சின்னதாய் யுத்தங்கள்
சிறு சிறு தாக்குதல்கள்

எருமை மாடு
பண்ணி பரதேசி
செம்மறி சேங்கு
எடேய் புடேய் – என்று
ஏதேதோ திட்டி
வாய் வீரம் காட்டி
வளமாய் சிக்கினால்
வாங்கி கட்ட வளமாய் ஒருத்தி.

கண்டோஸ் தொடங்கி
கடைப்பலகாரம் வரையும்
அம்மா தொடங்கி – அவள்
அன்பு வரைக்கும்
அரைவாசி பங்குக்கு
அடிபட ஒருத்தி..

சும்மா போகேக்க
சொறிஞ்சிட்டு போகவும்

அழவச்சுப்பாத்து
அழகா ரசிக்கவும்

அண்ணன் எண்டு
அதிகாரம் காட்டவும்

ஆற்றேனும் கோவத்தை
அடிச்சு தீக்கவும்
அடிமையாய் ஒருத்தி வேணும்..

எல்லாம் முடியும்
காலமும்க டக்கும்..

அண்ணா என்றழைக்க
அடிமனம் விரும்பும்
அடியேய் எண்டவன்
அம்மா என்பான்..

கோவிலுக்கும் குளத்துக்கும்
குமர்பிள்ளை போகேலா.
கூட்டிட்டு போ எண்டு
திட்டிட்டு போக..

அம்மாட அரியண்டம்
அதனால வாடி எண்ட
கவுத்துட மாட்டியேணு
கழுதை கேக்க
காதைப்பொத்தி போட்டு
கைபுடிச்சிழுத்தேத்தி

எல்லா திறமையும் எடுத்து காட்டி
எட்டெல்லாம் அடிச்சு
கத்திக் கதற வச்சு
இனிமேல் இவனோட
எங்கயும் போகமாட்டன்
எரும மாடெண்டு
இதமாய் திட்ட ஒருத்தி..

கழுதைக்கு கலியாணம்
கண்டபடி செலவாகும்
காசு சேக்கோணும்
கடமை வந்து நிக்கும்

காதல் மறப்பான்
கஸ்ரமும் மறைப்பான்
தன்னையும் இழப்பான் -தன்
தன்மையும் இழப்பான்
அண்ணன் அன்புணர
அடுத்தவன் கைபுடிப்பான்

அப்ப புரியும்
அடிச்சதும் அழுததும்
கடிச்சதும் கதறியதும்..

அண்ணனும் அப்பன்தான்..

( ஒரு பிள்ளை வரமில்லை ஒரு வகைச் சாபம்)

எழுதியவர் ஸ்ரீ கோகுல்

பகிரவும்...