ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம்..
கொழும்பு – ஜாவத்த பிரதேச வான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று இரவு ட்ரோன் கெமரா ஒன்று வான் பகுதியில் பறப்பதாக கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நாரஹேன்பிடி காவற்துறை குறித்த கெமரா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் ட்ரோன் கெமரா தொடர்ச்சியாக பம்பலப்பிடிய பிரதேசம் நோக்கி பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடற்பரப்பு நோக்கி பறந்துள்ள நிலையில் காவற்துறை விமானபடையினருக்கு தகவல் வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலினை தொடர்ந்து ட்ரோன் கெமரா செயற்படுத்துவது தற்காலிகமாக நிறுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.