ட்ரம்ப்-கிம் சந்திப்பு உலக சமாதானத்தில் தாக்கம் செலுத்தும்: வியட்நாம் மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னிற்கும் இடையிலான சந்திப்பு உலக சமாதானத்தில் பாரிய தாக்கம் செலுத்தும் என வியட்நாம் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ட்ரம்ப்-கிம் சந்திப்பு தலைநகர் ஹனோயில் நடத்தப்படவுள்ளமையை வியட்நாம் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், அது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இச்சந்திப்பு குறித்து வியட்நாம் பிரஜையொருவர் கூறுகையில், ”ட்ரம்ப் மற்றும் கிம் தற்போது உலகின் முக்கிய இரு நபர்களாக மாறியுள்ளனர். அவர்கள் உலக சமாதானத்தில் நிச்சயம் தாக்கம் செலுத்தக்கூடும். அவர்கள் இருவரையும் கண்டு நான் வியக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் வியட்நாமில் நடைபெறவுள்ள சந்திப்பு வெற்றிகரமாக அமையும். இப்பேச்சுவார்த்தை அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான சமாதானத்திற்கு அத்திவாரமாக அமையும் என எதிர்பார்ப்பதாக மற்றுமொருவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையிலான வரலாற்கு முக்கியம் வாய்ந்த இரண்டாவது சந்திப்பு எதிர்வரும் 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !