ட்ரம்ப்-கிம் உடன்படிக்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவை வலியுறுத்தும் ஐ.நா.

அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டிற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்-கிம் உச்சிமாநாடு குறித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கையை வாசித்த, அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் பற்றிக் கொள்ள வேண்டும் ஐ.நா. செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு அமைய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த உலகளாவிய சமூகத்தின் ஆதரவு அவசியம் என்றும் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளதாக, பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !