ட்ரம்ப்-கிம் இரண்டாவது உச்சிமாநாடும் ஆசியாவில்!- பொம்பியோ அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னிற்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடும் ஆசியாவில் நடத்தப்படும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதற்கான தயார்படுத்தல்கள் குறித்து ஆராய்வதற்கான அமெரிக்க குழு ஆசியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகமொன்றுக்கு அவர் நேற்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனை தெரிவித்தார்.

ஆனால், மாநாடு நடத்தப்படும் இடம் தொடர்பான அறிவித்தலை பொம்பியோ வெளியிடவில்லை. இந்நிலையில், உச்சிமாநாட்டை நடத்துவது தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்காத போதிலும், அவ்வாறான சந்திப்பொன்றை நடத்துவதற்கான திறன் தம்மிடம் இருப்பதாக வியட்நாம் அறிவித்துள்ளது.

இதேவேளை, உச்சிமாநாட்டை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக சிங்கப்பூர் மற்றும் பங்கொக் ஆகிய நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !