ட்ரம்பை எதிர்த்து Michael Bloomberg போட்டியிடவுள்ளார் – சர்வதேச ஊடகங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து Michael Bloomberg போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயகக் கட்சி சார்பாக இவர் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி Joe Biden உள்ளிட்ட 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் 9ஆவது செல்வந்தரான 77 வயதுடைய Michael Bloomberg ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.