ட்ரம்புக்கு எதிராக செயற்பட்ட FBI உளவாளி பணி இடைநீக்கம்!

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான எப்.பி.ஐ.யின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த எப்.பி.ஐ. உளவாளியான பீட்டர் ஸ்ட்ரோக், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான குறுந்தகவல்களை தனது நண்பருடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் 60 நாட்களுக்கு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு எதிராக பீட்டர் ஸ்ட்ரோக் செயற்பட்டதாகவும் அவரது தேர்தல் வெற்றியை தடுக்க முயன்றதாகவும் குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வெற்றிபெறச் செய்வதற்காக ரஷ்யா செயற்பட்டதாக ஏற்கனவெ குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி டிரம்ப் பற்றிய குறுந்தகவல் பறிமாற்றத்தின் போது, அவ்வாறான விடயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எப்.பி.ஐ. உளவாளி பீட்டர் ஸ்டாக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எப்.பி.ஐ. பிரதி பணிப்பாளர் டேவிட் போவ்டிச் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவிட்டதாக ஸ்ட்ரோக்கின் சட்டத்தரணி ​தெரிவித்துள்ளார்.

எப்.பி.ஐ ஊழியரின் ஒழுக்க விதிமுறைகளின் கீழேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !