ட்ரம்பின் நிர்வாகத்தை விமர்சித்த அங்கேலா மெர்க்கல்

வெற்றியாளர்களையும், தோல்வியாளர்களையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை பின்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தை ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் விமர்சித்துள்ளார்.

ஜி-20 மாநாடு தொடர்பில் ஊடகமொன்றுக்கு அவர் நேற்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், அண்மையில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உலகம் ஒரு சமூகம் அல்ல, அது போட்டிக்கான ஒரு அரங்கம் எனக் குறிப்பிட்டார். அந்த கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பொருளாதார அபிவிருத்தியின் மூலம் ஒரு சிலர் மாத்திரமின்றி, அனைவரும் நன்;மையடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கே நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

வெற்றியாளர்களையும், தோல்வியாளர்களையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை பின்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தை ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் விமர்சித்துள்ளார். ஜி-20 மாநாடு தொடர்பில் ஊடகமொன்றுக்கு அவர் நேற்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அவர், அண்மையில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உலகம் ஒரு சமூகம் அல்ல, அது போட்டிக்கான ஒரு அரங்கம் எனக் குறிப்பிட்டார். அந்த கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொருளாதார அபிவிருத்தியின் மூலம் ஒரு சிலர் மாத்திரமின்றி, அனைவரும் நன்;மையடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கே நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !