டேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேற்றம்!
டேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேறியுள்ளன.
ஸ்பெய்னின் மேட்ரிட் நகரில் நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடாலும், அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனும் மோதினர். இதில் நடால் 6-1,6-2 செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் ரபேல் நடால் இணை, அர்ஜென்டினாவின் மேக்சிமோ கான்சாலஸ் இணையை 6-4, 4-6, 6-3 செட் கணக்கில் தோற்கடித்தது.
இதனால் 2 இற்கு 1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று அரையிறுதிக்கு ஸ்பெய்ன் அணி முன்னேறியது.
அதேபோன்று பிரித்தானிய அணியும் ஜேர்மன் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதியில் பிரித்தானிய ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.