டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசை- முதல் இடத்தை பிடித்தார் ரபாடா

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கடந்த 9-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. நான்கு நாட்களில் இதில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்தி ரபாடா முதுகெலும்பாக இருந்தார். துரதிருஷ்டவசமான ஓழுங்கீன நடவடிக்கைக்கு ஆளாகி கடைசி இரண்டு டெஸ்டிலும் விளையாட தடைபெற்றுள்ளார்.

ஆனால் டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரபாடா 902 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 887 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 3-வது இடத்திலேயே நீடிக்கும் நிலையில், அஸ்வின் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது டெஸ்டில் பெரிய அளவில் சாதிக்காக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்மித் 943 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 912 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜோடி ரூட் 881 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 855 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், டேவிட் வார்னர் 831 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர். சதம் அடித்த டி வில்லியர்ஸ் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !