டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கதாயுதத்தை ஏந்தியது இந்தியா!
டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலானது, கிரிக்கெட் அணிகளுக்கு மிக முக்கியமான தரவரிசைப் பட்டியலாக பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிடும்.
இந்த பட்டியலில், முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு சம்பியன்ஷிப் பட்டத்தோடு, ஐசிசி.யின் கதாயுதமும் வழங்கப்படும். அத்துடன் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
அத்தோடு, இரண்டாவது மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ள அணிகளுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
இதனடிப்படையில், இந்த தரவரிசைப் பட்டியலில், முதல் இடம் பிடித்துள்ள இந்திய அணிக்கு, கதாயுதமும், 10 லட்சம் டொலர்கள் பரிசுத்தொகையையும் வழங்கப்படுகின்றது.
தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிக்கு 5 லட்சம் டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படுகின்றது.
மூன்றாவது இடத்தை பிடித்துள்ள தென்னாபிரிக்காவிற்கு, இரண்டு லட்சம் டொலர்களும் வழங்கப்படுகின்றது.
மேலும், நான்காவது இடம் பிடித்துள்ள அவுஸ்ரேலியாவுக்கு 1 லட்சம் டொலர்களும் வழங்கப்படுகின்றது.
சரி தற்போது புள்ளிகளுடன் கூடிய தரவரிசைப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் உள்ள அணிகளின் விபரங்களை பார்க்கலாம்.
இப்பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் அணி, 116 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 108 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா 105 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அவுஸ்ரேலியா 104 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 104 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை அணி 93 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
மேலும், பாகிஸ்தான் அணி 88 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், விண்டிஸ் அணி 77 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பங்களாதேஷ் 68 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், சிம்பாப்வே 13 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.