Main Menu

டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக  மூன்றாவது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார். அவருடன் இணைந்து ஆறு அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

குறித்த பதவியேற்பு விழா டெல்லி  ராம்லீலா மைதானத்தில் நடைப்பெறுகிறது. கெஜ்ரிவால் மற்றும் ஆறு அமைச்சர்களுக்கும் டெல்லி துணைநிலை ஆளுநர்  அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

விழாவில் பங்கேற்க,  பிரதமர் மோடி,  டெல்லியைச் சேர்ந்த பா.ஜ.க.வின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்  கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் சமீபத்தில் இடம்பெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பறியது.

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார். கெஜ்ரிவாலின் பரிந்துரையை ஏற்று ஆறு பேர் அமைச்சர்களாக பதவியேற்கவும் அவர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.